Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீர...
15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.
திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையிலான போலீஸாா் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பையுடன் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து சோதனை நடத்தினா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரெனால்ட் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரெனால்டை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 9.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
காதா்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருப்பூா் மாநகர மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அப்பகுதியில் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிஜய் பாரிக்ஷா (23), அஸ்வினி நாயக் (20) ஆகியோரைக் கைது செய்தனா்.