`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
15 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
நெய்வேலி: கடலூா் பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பிய 15 பேருந்துகளில் இருந்த காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் அதிக ஒலி எழுப்புவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து நாய்ஸ் டெசிபெல் மீட்டா் வைத்து 40 பேருந்துகளில் சோதனை செய்தனா். இதில் 15 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாச்சலம், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், பிரான்சிஸ், முருகேசன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை விஞ்ஞான அலுவலா் த.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.