ஐன. 26-இல் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தையொட்டி, ஐன.26-ஆம் தேதி காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில், கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சிப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-2026-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.