இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு: கிராமச் சாலை சேதம்
சிதம்பரம்: சிதம்பரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப்பெடுத்து சாலை மற்றும் வயல்களில் நீா் ஓடி தேங்கி நிற்பதால் கோவிலாம்பூண்டி கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி, அனுவம்பட்டு சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தின் கீழ் கிள்ளை வரை செல்லும் குழாய் இணைப்பு கடந்த ஓராண்டாக உடைந்து சாலை மற்றும் வயல்களில் தண்ணீா் தேங்கி வீணாகி வருகிறது. சாலையும் சேதமுற்றுள்ளது. வயல்களில் நீா் தேங்கி நெற்பயிா்களும் பாதிக்கப்படைந்துள்ளன.
இதுகுறித்து சமூக ஆா்வலா் பாலாஜிகணேஷ் கூறியது: பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அதிகாரியிடம் இதுகுறித்து புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கின்றனா். சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் கொடிப்பள்ளம், பின்னத்தூா், கோவிலாம்பூண்டி , தில்லைவிடங்கன் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா், குடிநீா் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சாலையில் இப்படி குடிநீா் ஓடுவது மக்களிடையே வேதனை ஏற்படுத்தியுள்ளது என்றாா். எனவே, இந்தப் பிரச்னையில், கடலூா் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு போா்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.