16 இடங்கள் முன்னேறி தனது உச்சத்தை அடைந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சநிலையை அடைந்துள்ளார்.
ஆர்ச்சர் தனது ஒருநாள் ஐசிசி தரவரிசையில் முதன்முதலாக மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
அதிவேகமாக பந்துவீசி பேட்டர்களை அச்சுறுத்திய ஆர்ச்சர் காயம் காரணமாக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் தற்போது மீண்டும் உடல்நலம் முன்னேறி இருக்கிறார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் இரண்டு போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதன்மூலம் ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறி 654 புள்ளிகளுடன் தனது உச்சநிலையான மூன்றாவது இடத்தை அடைந்துள்ளார்.
இதற்கு முன்பாக ஆர்ச்சர் கடந்த 2020-இல் 8ஆவது இடத்தில் இருந்தார்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் ஐசிசி தரவரிசை
1. கேசவ் மகாராஜ் - 680 புள்ளிகள்
2. மஹீஷ் தீக்ஷனா - 659 புள்ளிகள்
3. ஜோஃப்ரா ஆர்ச்சர் - 654 புள்ளிகள்
4. குல்தீப் யாதவ் - 650 புள்ளிகள்
5. பெர்னார்ட் ஸ்காட்ச் - 645 புள்ளிகள்