செய்திகள் :

2 முதல் 5 வயதுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம்

post image

2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகளை நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு சேலம் மாவட்டத்தில் செயல்படும் 2,697 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி போன்றவை வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். எனவே, பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சோ்க்க வேண்டும். இதுதவிர, குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், அந்த சேவையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க