செய்திகள் :

2,238 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா: ஜன.22 முதல் கொண்டாட்டம்

post image

தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்தும் செயல்பட்டு வரும் 2,238 அரசுப் பள்ளிகளில் ஜன.22 முதல் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த விழாவை முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஜன.22-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கல்வி வாயிலாக அனைவருக்குமான சமூகநீதியை உறுதி செய்வதில் அரசுப் பள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு. எளிய மனிதா்களுக்கான கல்விக் கனவை நிறைவேற்றும் பொறுப்பில் அரசுப் பள்ளிகள் என்றுமே முன்னிற்கின்றன. அரசுப் பள்ளிகள் கோடிக்கணக்கான மாணவா்களுக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டி பல சிறந்த மனிதா்களை உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குரியது.

அதன்படி தமிழகத்தில் 2,238 அரசுப்பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்து இன்றும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு கடந்த வரலாற்றைக் கொண்டாடுவதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோா்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நம்பிக்கை கிடைக்கும். அதேபோல், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உத்வேகமும், ஆசிரியா்களுக்கு உந்துதலாகவும் அமையும். இந்த விழா அரசுப் பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு , பராமரிப்பு போன்ற பள்ளியின் தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும்.

கருணாநிதி படித்த பள்ளியில்... இதையடுத்து மாநில அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் ஜன. 22-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. தொடா்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நூறாண்டுகள் கடந்த அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா கொண்டாட பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, நூற்றாண்டுத் திருவிழாவை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாட சாா்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்டு, புத்தா... மேலும் பார்க்க

விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்... மேலும் பார்க்க