2 ஆம் நாளாக ஆசிரியா்கள் மறியல்: 205 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 205 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான வகையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடந்த இரு தினங்களாக தொடக்கப்பள்ளி ஆசியா்கள் சங்கக் கூட்டமைப்பு குழுவினா் ஆா்ப்பாட்டம், நடத்தி வருகின்றனா்.
2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் ஈடுபட்ட 83 பெண்கள் உள்பட 205 ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.