``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்...
2 பெண்கள் தற்கொலை
ஆளூா், தக்கலையில் 2 பெண்கள் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
ஆளூா் அருகே வீராணியைச் சோ்ந்த ஓட்டுநா் நாகராஜன் (52). இவரது மனைவி வேணி (45), கடன் வாங்கியிருந்ததாகவும், அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை நாகராஜன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வேணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாம். புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: தக்கலை அருகே குழிக்கோடு பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஜெயக்குமாா் (48). இவரது மனைவி ராணி (43). இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா்.
ராணி பலருக்கு கடன் கொடுத்ததாகவும், அவா்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ராணி செவ்வாய்க்கிழமை வீட்டின் பின்புறம் தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ராணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.