செய்திகள் :

2-வது போட்டியிலும் வெற்றி; டி20 தொடரில் நியூசிலாந்து முன்னிலை!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று (மார்ச் 18) இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

பாகிஸ்தான் - 135/9

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது. மழையின் காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

இதையும் படிக்க: கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் சல்மான் அகா அதிகபட்சமாக 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து ஷதாப் கான் 26 ரன்களும், ஷகின் அஃப்ரிடி 22 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி, பென் சியர்ஸ், நீஷம் மற்றும் ஈஷ் சோதி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நியூசிலாந்து வெற்றி

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 135 ரன்கள் குவிக்க, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் களமிறங்கினர். இந்த இணை நியூசிலாந்துக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது.

அதிரடியில் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஃபின் ஆலன் 16 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

அதன் பின் களமிறங்கியவர்களில் டேரில் மிட்செல் 14 ரன்கள், மிட்செல் ஹே 21 ரன்கள் எடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குக... மேலும் பார்க்க

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொ... மேலும் பார்க்க

ரஜத் படிதார் ஆர்சிபியை நீண்ட காலம் வழிநடத்துவார்: விராட் கோலி

ரஜத் படிதார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நீண்ட காலத்துக்கு கேப்டனாக வழிநடத்துவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தே... மேலும் பார்க்க

ரமலான் நோன்புடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்! திடலில் மயங்கி விழுந்து பலியான சோகம்!

ஆஸ்திரேலியாவில் நோன்புடன் விளையாடிய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் திடலில் மயங்கி விழுந்து பலியானார்.பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஜுனைல் ஸஃபர் கான் என்ற கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கிளப... மேலும் பார்க்க

உ.பி. முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற லக்னௌ அணியினர்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து லக்னௌ அணி உரிமையாளர், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அணி வீரர்கள் வாழ்த்துப்பெற்றனர்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்... மேலும் பார்க்க