யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
2023-24 நிதியாண்டில் ரயில் பயணிகளுக்கு ரூ. 60,466 கோடி கட்டண சலுகை- மத்திய அரசு தகவல்
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் பயணிகளுக்கு 45 சதவீத மானியமாக சுமாா் ரூ. 60,466 கோடி கட்டண சலுகையை ரயில்வே வழங்கியுள்ளதாக மக்களவையில் அத்துறையின் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.
அவா் அளித்துள்ள பதிலில், ‘இந்திய ரயில்வே ஆண்டுதோறும் 720 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போதும் இந்தியாவின் ரயில் பயணக் கட்டணங்கள் உலகிலேயே மிகக் குறைவானவை. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1-ஆம் தேதிமுதல் ரயில் பயணக் கட்டணங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
ஒரு கி.மீ.க்கு சாதாரண வகுப்புகளுக்கு அரை பைசா முதல் உயா் ரக வகுப்புகளுக்கு 2 பைசா வரை மட்டுமே பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நிதி சுமையைத் தவிா்க்க, மாதாந்திர பயணச்சீட்டு மற்றும் புகா் ரயில் பயணக் கட்டணங்கள் திருத்தப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.