2025-இல் 195 ஸ்டிரைக் ரேட், 57 சராசரி... உச்சத்தில் இருக்கும் டிம் டேவிட்!
ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் இந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் தனது உச்சத்தில் விளையாடி வருகிறார்.
ஆஸி.யைச் சேர்ந்த 22 வயதாகும் டிம் டேவிட் மொத்தமாக 286 டி20 போட்டிகளில் 5,604 ரன்கள் குவித்துள்ளார்.
இந்தாண்டு மட்டும் 452 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக 12 போட்டிகளில் 185.15 ஸ்டிரைக் ரேட்டில் 187 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் தொடரில் டிம் டேவிட்டின் சராசரி 62.33-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணிக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 0,102, 30 ரன்கள் குவித்தார்.
தற்போது, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 83, 50 என இரண்டு போட்டிகளிலும் அசத்தியுள்ளார்.
இந்தாண்டு மட்டும் ஸ்டிரைக் ரேட் 195.06 -இல் விளையாடும் டிம் டேவிட்டின் சராசரி 57.66-ஆக இருக்கிறது.
டிம் டேவிட், தனது டி20 கிரிக்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். இதேபோல் இந்தத் தொடரில் விளையாடினால் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய பங்களிப்பை ஏற்படுத்துவார் எனக் கணிக்கப்படுகிறது.