3 முக்கிய சுகாதாரத் திட்டம்: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாதெமியில் ...
2025 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது!
2025 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.
ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் நடப்பு ஆண்டுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.
காலியாகவுள்ள 979 பணியிடங்களுக்கு இன்று(ஜன. 22) முதல் பிப். 11 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்க | பரந்தூருக்குப் பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாம்! - அன்புமணி ராமதாஸ்
முதல்நிலைத் தேர்வு வருகிற மே 25 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான upsc.gov.in-இல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெண்கள்/எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ. 100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதள பக்கமான upsc.gov.in-இல் அணுகலாம்.