47 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இன்றுமுதல் விமான சேவை!
2025-இல் தோல்வியே காணாத அணி..! புள்ளிப் பட்டியலில் முதலிடம்!
பார்சிலோனா அணி ல லீகா கால்பந்து தொடரில் முதலிடத்தை தக்கவைத்தது.
ல லீகா கால்பந்து தொடரில் இன்று (மார்ச்.28) ஒசாசுனா உடன் பார்சிலோனா மோதியது. இதில் பார்சிலோனா 3-0 என வென்றது.
இந்தப் போட்டியில் 11, 21 (பெனால்டி), 77ஆவது நிமிஷங்களில் முறையே பார்சிலோனா வீரர்கள் ஃபெர்ரன் டர்ரஸ், டானி ஒல்மா, லெவண்டாவ்ஸ்கி கோல் அடித்தார்கள்.
2025இல் தோல்வியே காணாத அணி
இந்த சீசனில் லெவண்டாவ்ஸ்கி 23 கோல்களுடன் முன்னிலை வகிக்கிறார்.
2025இல் தொடர்ச்சியாக 19 போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் பார்சிலோனா வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் பார்சிலோனா
இந்தப் போட்டி மார்ச்.8இல் நடைபெறவிருந்தது. ஆனால், அணியின் மருத்துவர் இறந்துவிட்டதால் போட்டி இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா 63 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்தது.
20 அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 38 போட்டிகளில் விளையாடும். அதில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் பெறும்.
ல லீகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 63 புள்ளிகள் (28 போட்டிகள்)
2. ரியல் மாட்ரிட் - 60 புள்ளிகள் (28 போட்டிகள்)
3. அத்லெட்டிகோ மாட்ரிட் - 56 புள்ளிகள் (28 போட்டிகள்)
4. அத்லெட்டிகோ கிளப் - 52 புள்ளிகள் (28 புள்ளிகள்)
5. வில்லா ரியல் - 44 புள்ளிகள் (27 புள்ளிகள்)
6. ரியல் பெட்டிஸ் - 44 புள்ளிகள் (28 புள்ளிகள்)
HIGHLIGHTS!
— FC Barcelona (@FCBarcelona) March 28, 2025
3️⃣ Barça
0️⃣ Osasuna#LaLigaHighlightspic.twitter.com/HtGetd8p4a