செய்திகள் :

2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது: ஆர். எஸ். பாரதி

post image

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆர். எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சட்டம் ஒழுங்கு குறித்து பேரவையில் பழனிசாமி சொன்ன பொய் குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார்.

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி! அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி! என அடிமை அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார்.

கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றி எல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்தபோதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்ன போதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜக கூட்டனிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி!

தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப் போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி! தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி!

தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவிற்கும், அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் ‘கெட் அவுட்’ சொல்லப்போவது உறுதி! இப்போது இருக்கிற 66 அதிமுக எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கையில் 2026-ல் 6 கூட கிடைக்காது.

இதையும் படிக்க: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவி... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் - நகரும் படிக்கட்டுகளால் விபத்து: கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்கும் மசோதா நிறைவேறியது

மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளால் ஏற்படும் விபத்துகளை குற்ற நிகழ்வாக இல்லாமல் கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேறியது. சட்டப் பேரவையில் 18 மசோதாக்கள் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த வி... மேலும் பார்க்க

கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட கவிதை வடிவிலான பதிவு: கள்ளச... மேலும் பார்க்க