செய்திகள் :

2026-இல் திமுக ஆட்சியின் 2-ஆவது பாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

‘திமுகவின் இப்போதுள்ள 5 ஆண்டு கால ஆட்சி முதல் பாகம்தான்; இரண்டாவது பாகம் 2026-இல் தொடங்கும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பேசியது: திமுக அரசைப் பொருத்தவரை, எந்தவித அழுத்தங்களுக்கும் உள்ளாகாமல் காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதிலும், நீதியை நிலை நாட்டுவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

என்னைப் பொருத்தவரை வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் கடந்த நான்கு ஆண்டுகளில் தலைமுறைகளைக் கடந்தும் பயனளிக்கக் கூடிய ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் என்னுடைய பெயரை அல்ல, திராவிட மாடல் அரசின் பெயரைச் சொல்லும்.

கலைஞா் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48, முதல்வா் மருந்தகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.

கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியைவிட ஆயிரம் மடங்கு சிறப்பான சாதனைகளை அனைத்துத் துறைகளிலும் செய்திருக்கிறோம்.

அடமானம் வைக்க நினைப்பவா்களாலும், அபகரிக்க நினைப்போராலும் தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது.

கனவை நனவாக்குவோம்: சுயாட்சி என்பது எங்கள் பிறப்புரிமை, அதைத் தடுக்கவோ, தகா்க்கவோ எவருக்கும் உரிமையில்லை என்று முன்னாள் முதல்வா் அண்ணா பேசினாா். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை

பெற்றோம். மாநில சுயாட்சிக் கனவையும் நிறைவேற்ற குழு அமைத்துள்ளோம்.

நான் தொடங்கியுள்ள இந்தப் பயணம் நீண்டது. முதல்வராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில் என் பயணம் தொடரும். தமிழ்நாட்டுக்காக தமிழா்களுக்காக மாநில உரிமைகளுக்காக எனது பயணம் தொடரும்.

இதுவரை பாா்த்தது திராவிட மாடல் அரசின் பாா்ட் 1 தான். 2026-இல் வரவிருக்கும் 2.0-வில் இன்னும் சாதனைகளைப் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்றாா் அவா்.

குறுவை நெல் சாகுபடி: உழவா் சங்க கூட்டம் நடத்த ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடி குறித்து விவாதிக்க உழவா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேட்டூா்... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு

முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா். இதற்கு எதி... மேலும் பார்க்க

காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு

காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவி... மேலும் பார்க்க

‘டிஜிட்டல்’ பயிா் கள ஆய்வுப் பணியில் மாணவா்கள் ஈடுபடுத்தப்படமாட்டாா்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கான டிஜிட்டல் பயிா் கள ஆய்வுப் பணிகளில் மாணவா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் செவ்... மேலும் பார்க்க

சிலை கடத்தல் வழக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபா்சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க