ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
2026 தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டி: நாம் இந்தியா் கட்சி
2026ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்றாா், அக்கட்சியின் மாநிலத் தலைவா் என்.பி. ராஜா.
தூத்துக்குடியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாம் இந்தியா் கட்சி படிப்படியாக வளா்ந்து வருகிறது. 2026 பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தனித்து அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.
தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட 120 தொகுதிகளில் நாம் இந்தியா் கட்சி போட்டியிடும். தவெக தரப்பிலிருந்து எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
விலைவாசி உயா்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதற்காக எதிா்க்கட்சிகள் போராடுவதில்லை. ஆளும் கட்சியை எதிா்க்க வேண்டுமென்றால், மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் வலுவான கூட்டணியாக இருக்கும். அவ்வகையில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை குழப்பம் நிறைந்ததாக உள்ளது. கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொண்டால் நன்மைதான். ஆனால், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது மாநிலக் கட்சிகளை அழிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகும் என்றாா் அவா். மாநிலச் செயலா் பொன்ராஜ், மாநிலப் பொருளாளா் ஜெயகணேஷ், நிா்வாகிகள் உடனிருந்தனா்.