`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
திரேஸ்புரத்தில் சிறுபடகு மீனவா்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சிறு படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்திற்கு திரேஸ்புரம் புனித தோமையாா் சாளை மீன்பிடி மீனவா்கள் நலச்சங்க தலைவா் மெல்டன் தலைமை வகித்தாா்.
திரேஸ்புரத்தில் உள்ள நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தின் ஒரு பகுதியில் சுமாா் 200 சிறு படகு மீனவா்கள் சாளை மீன், நண்டு ஆகியவற்றை பிடித்து தொழில் செய்து வருகின்றனா். தற்போது அங்கு போட் யாா்டு அமைக்கப்பட்டுள்ளதால், பெரிய படகுகளை கடலில் இறக்கும்போது இவா்களது படகுகள் சேதமடைவதாகக் கூறி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள் கூறியதாவது: இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் வரை கடலுக்குச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மீன்வளத் துறையினரும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துப் படகுகளும் நிறுத்துவதற்கு ஏதுவாக ‘ப’ வடிவ ஜெட்டி பாலம் அமைக்க வேண்டும் என்றனா்.