செய்திகள் :

23 ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தில் வாங்கிய தாவூத் சொத்து; சொந்தமாக்க முடியாமல் போராடும் உ.பி தொழிலதிபர்

post image

மும்பையில் தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான ஏராளமான சொத்துகள் இருந்தது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு தாவூத் இப்ராகிம் குடும்பத்தோடு பாகிஸ்தானிற்கு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து தாவூத் இப்ராகிம் சொத்துகளை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு கையகப்படுத்தியது. அவ்வாறு கையகப்படுத்திய சொத்துகள் பின்னர் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தாவூத் இப்ராகிமிற்கு பயந்து ஏலத்தில் விடப்பட்ட சொத்துகளை வாங்க யாரும் முன்வரவில்லை. தொடர்ந்து நடத்தப்பட்ட ஏலத்தில் தாவூத் இப்ராகிமின் அனைத்து சொத்துகளும் விற்பனை செய்யப்பட்டது. இதில் தென்மும்பை சுக்லாஜி தெருவில் தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான ஒரு கடை இருந்தது. அந்த கடையை உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் ஜெயின் வாங்கினார்.

அவர் கடையை 2001ம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய ஏலத்தில் எடுத்தார். ஏலம் எடுக்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிர்வாகம் அக்கடையை ஹேமந்த் ஜெயின் பெயரில் பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த மாதம் 19ம் தேதிதான் அந்த சொத்து ஹேமந்த் ஜெயின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சொத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக ஹேமந்த் ஜெயின் மும்பை வந்துள்ளார். அவர் நேராக கடை இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு கடை திறந்திருந்தது. அங்கு இருந்தவர்களிடம் கடையை எப்போது காலி செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, சரியாக பதில் சொல்லவில்லை. அருகில் இருந்தவர்கள் கடையை எப்போது கையப்படுத்துவாய் என்று ஏளனமாக கேட்டனர்.

ஜெயின் முதலில் அங்குள்ள நாக்பாடா காவல் நிலையத்திற்கு சென்று கடையை தன்வசப்படுத்த தனக்கு உதவி செய்யும்படி கேட்டார். ஆனால் அவருக்கு உதவ போலீஸார் முன் வரவில்லை. இது குறித்து ஹேமந்த் ஜெயின் கூறுகையில், ''உங்களது பைல் துணை போலீஸ் கமிஷனரிடம் சென்று இருக்கிறது என்று சொன்னார்கள். ஒர்லியில் உள்ள துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற போது இரவில் வரும்படி கேட்டுக்கொண்டார்கள். இரவு சென்றபோது இன்ஸ்பெக்டர் ஷிண்டேயை சந்திக்கும்படி கூறினர். அவரோ உங்களது பைல் நாக்பாடா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்'' என்றார்.

போலீஸ் துணை இல்லாமல் அக்கடையை ஹேமந்த் ஜெயினால் கையகப்படுத்த முடியாது. ஆனால் அவருக்கு உதவ போலீஸார் தயாராக இல்லை. கடை இருக்கும் பகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகமாக இருக்கின்றனர். இதனால் கடையை கட்டாயப்படுத்தி கையகப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர் என்று கூறப்படுகிறது.

Saif Ali Khan: `முக்கிய பிரமுகர்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில்..?’ - உத்தவ் சிவசேனா காட்டம்

சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்துமும்பையில் இன்று அதிகாலை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். அவருக்கு பாந்த்ரா லீலாவதி மரு... மேலும் பார்க்க

''மனைவிக்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்...'' - யுவராஜ் சிங் தந்தையின் கருத்து, நெட்டிசன்கள் கொதிப்பு!

தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான முன்னாள் கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் சிங், யூடியூப் நேர்காணல் ஒன்றில் இந்தி மொழியை கேலி செய்தும் பெண்கள் குறித்து பாலியல்ரீதியான கருத்துகளை பேசியும் ... மேலும் பார்க்க

`எம் பிள்ளை... எங்க அம்மா... என்ன விட்டு போக முடியாது’ - கலங்க வைக்கும் காந்திமதி யானையின் இழப்பு

`காந்திமதி யானை'தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடதக்க ஒன்று நெல்லையப்பர் கோயில். நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். ந... மேலும் பார்க்க

தன்னைத்தானே வாடகைக்கு விட்டு, ரூ.69 லட்சம் வருமானம்; ஜப்பான் இளைஞரின் `அடேங்கப்பா' தொழில்!

ஜப்பானைச் சேர்ந்த 41 வயதான Shoji morimoto என்பவர் ஒன்றும் செய்யாமல் தன்னை வாடகைக்கு விடுவதற்கு மிகவும் பிரபலமானவர். 2018 ஆம் ஆண்டில் முன்முயற்சி இல்லாமல் பணி செய்ததால் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்ட... மேலும் பார்க்க

`இந்தியா - தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்கு அல்ல!' - ஆதவன் தீட்சண்யா| Long Read

‘‘சோளத்தை அரைக்கும் கரங்களை விடுவித்துவிடுங்கள், மாவரைக்கும் சிறுமியர் அமைதியாகத் தூங்கட்டும், இந்த நாள் முடிவுக்கு வருகிறதென்று அதிகாலைச் சேவல் வெறுமனே ஒப்புக்கு கூவட்டும்! சிறுமிகளின் வேலையைத் தேவதை... மேலும் பார்க்க