234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
"மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் சொல்லியிருக்கிறோமோ அதனை நிறைவேற்றியிருக்கிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
அதனால் ஒன்று உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். இன்றைக்குக்கூட பேசும்போது சிலர் சொன்னார்கள். வரும் தேர்தலில் 200 அல்ல, 220 இடங்களைப் பெறுவோம் என்று. அதுல என்ன கஞ்சம்? 234 -ன்னே சொல்லுங்களேன் என்று சொன்னார்கள். அதனால் 234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மக்கள் அளிக்கும் ஆதரவை நான் பார்க்கிறேன்.
மயிலை வேலு ஊர்ந்தோ, தவழ்ந்தோ பதவிக்கு வரவில்லை. படிப்படியாக வளர்ந்து பதவிக்கு வந்தார்" என்று பேசினார்.