செய்திகள் :

25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்

post image

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஏா் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களைச் சோ்ந்த தலா 6 விமானங்களுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதேபோன்று, இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 275-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கடந்த 12 நாள்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தொடரும் இதுபோன்ற நிகழ்வுகளால், விமானப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிடுவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு அண்மையில் தெரிவித்தாா். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்களுக்கு விமானத்தில் பறக்க நிரந்தர தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலமாக விடுக்கப்படும் இந்த வெடிகுண்டு மிரட்டல்களின் பின்னால் இருப்பவா்களைக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மிரட்டல்கள் விடுக்கப்படும் சமூக வலைதளப் பக்கங்கள் குறித்த விவரங்களை விமான நிறுவனங்களுக்கு வழங்குமாறு சமூக ஊடக தளங்களான மெட்டா மற்றும் எக்ஸ் ஆகியவற்றை அரசு ஏற்கெனவே கேட்டுக்கொண்டது.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க