செய்திகள் :

26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

post image

ரோஜா ரோஜா பாடலைப் பாடிய பாடகர் திடீரென இணையத்தில் வைரலாகியுள்ளார்.

இணைய வளர்ச்சிக்குப் பின் சமூக வலைதளங்களில் எப்போது, எந்த விஷயம் வைரலாகும் எனத் தெரிவதில்லை. திடீரென இன்று நடந்த சம்பவம் சில நாள்கள் ஆக்கிரமித்தால் தொடர்பு இல்லாமல் என்றோ பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவமும் பட்டியலில் இணைந்து தீயாக டிரெண்டிங்கில் இடம்பெறும்.

அந்த வகையில், சற்றும் எதிர்பாராத விதமாக ரசிகர்களைக் கவர்ந்த தமிழ்த் திரைப்பாடலான, ‘ரோஜா... ரோஜா’ பாடலைப் பாடிய பாடகர் ஒருவர் கடந்த சில நாள்களாக முகநூல், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அவர் பெயர் சத்யன் மகாலிங்கம். இயக்குநர் கதிர் இயக்கிய காதலர் தினத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இடம்பெற்ற, ‘ரோஜா.. ரோஜா’ பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இந்தப் பாடல் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தது. இதனால், அப்போது பல இசை நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் பாடப்பட்டது.

அப்படி, மேடைப் பாடகரான சத்யன் இந்த, ‘ரோஜா ரோஜா’ பாடலை 26 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சியொன்றில் பாடியிருக்கிறார். மிகக் கடினமான பாடல் என்றாலும் அந்த நிகழ்ச்சியில் மிகச்சாதாரணமாக சத்யன் பாடியது இன்றைய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினத்தில் இடம்பெற்ற இப்பாடல் பாடகர் சத்யனால் மீண்டும் வைரலாகியுள்ளதால் இவர் யார் என பலரும் தேட ஆரம்பித்துவிட்டனர்.

மேடைப்பாடகராக அறியப்பட்ட சத்யனின் திறமையைக் கண்ட இசையமைப்பாளர்கள் பல பாடல்களைப் பாட வாய்ப்பளித்தனர்.

முக்கியமாக, சத்யன் பாடிய கலக்கப்போவது யாரு (வசூல் ராஜா MBBS), ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு), சில் சில் மழையே (அறிந்தும் அறியாமலும்), அட பாஸு பாஸு (பாஸ் என்கிற பாஸ்கரன்), குட்டி புலி கூட்டம் (துப்பாக்கி), கனவிலே கனவிலே (நேபாளி), தீயே தீயே (மாற்றான்), குப்பத்து ராஜாக்கள் (பானா காத்தாடி) ஆகிய பாடல்கள் பிரபலமாக இருந்தும் சத்யனுக்கு பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை.

திறமையான பாடகராக இருந்தும் தொடச்சியான வாய்ப்புகள் இல்லாததால் குறைவான எண்ணிக்கையிலேயே பாடல்களைப் பாடியிருக்கிறார். கரோனா காலத்தில் பாடல்கள் வாய்ப்பு கிடைக்காததால் பொருதாளார தேவைக்காக உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சத்யனுக்கு இன்ப அதிர்ச்சியாக இவர் பாடிய ’ரோஜா, ரோஜா’ பாடல் 26 ஆண்டுகளுக்குப் பின் வைரலாகி மீண்டும் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

இதற்காக, சத்யன் நன்றி தெரிவித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுவாரஸ்யமாக, அன்று ரோஜா ரோஜா பாடலைப் பாடியபோது அவருடன் இணைந்து கோரஸ் பாடிய பாடகி ஒருவரையே சத்யன் காதல் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது!

இதையும் படிக்க: தனுஷை ஏமாற்ற நினைத்தேன்: விஜய் ஆண்டனி

viral singer sathyan mahalingam who sung roja roja song

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் நடித்துள்ள ஆரோமலே படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆரோமலே படத்தின் அறிமுக விடியோ நாளை மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. விஜே சித்து வி லாக் என்ற யூடியூப் மூலம் ... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்!

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நடிகர்கள் அசோக் செல்வன், மணிகண்டன் ஆகியோரது நடிப்பில் உருவான “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகின்றது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக... மேலும் பார்க்க

பிரேசிலை வீழ்த்திய பொலிவியா..! உலகக் கோப்பைக்கான வாய்ப்பு தக்கவைப்பு!

முன்னாள் உலக சாம்பியன் பிரேசிலை பொலிவிய அணி 1-0 என வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பொலிவியா அணி தனது உலகக் கோப்பக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்று... மேலும் பார்க்க

காயத்துடன் விளையாடிய எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள்: நார்வே வரலாற்று வெற்றி!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்து மிரட்டியுள்ளார். நார்வே அணி மால்டோவை 11-1 என்ற கோல்கள் கணக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எர்லிங் ஹாலண்ட் 5 கோல்கள்தனது ... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் - 41 அப்டேட்!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐ... மேலும் பார்க்க

ஆர்வமூட்டும் கைதி மலேசிய ரீமேக் டீசர்!

கைதி திரைப்படத்தின் மலாய் மொழி ரீமேக் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தி கூட்டணியில் வெளியான கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது. இ... மேலும் பார்க்க