செய்திகள் :

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

post image

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப்பை மாதிரி பிரபலமான தொடரகும்.

இந்தத் தொடரில் ஆஸி.யின் 6 மாகாணங்களில் இருந்து அணிகள் விளையாடும். 10 போட்டிகளில் இந்த அணிகள் விளையாடும்.

இதன் இறுதிப் போட்டிகளில் தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லான்ட் அணிகள் மோதின.

இதில் குயின்ஸ்லான்ட் முதலிரண்டு இன்னிங்ஸ்களில் 95, 445 ரன்கள் எடுத்தது. தெ.ஆஸி. முதலிரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 270, 271/6 ரன்கள் எடுத்தது.

இதில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11 விக்கெட்டுகள் எடுத்த பிரன்டன் டாகெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் கோப்பையை 29 ஆண்டுகள் கழித்து தெற்கு ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

இந்த அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி. பிஜிடி தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடியவர்.

இந்த அணியில் விக்கெட் கீப்பர் அலெக்ச் கேரியும் ஜேசன் சங்காவும் சதமடித்து அசத்தினார்கள்.

கடைசி இன்னிங்ஸில் 269 ரன்களை சேஸ் செய்து வரலாற்று வெற்றது தெற்கு ஆஸ்திரேலியா.

இதற்கு முன்பாக 1990-1991இல் 232/2 ரன்களை சேஸ் செய்து விக்டோரியா அணி கோப்பையை வென்றிருந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராப் வால்டர் விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக ராப் வால்டர் செயல்பட்டு வந்தார். கடந்த 2023... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா? ஜியார்ஜ் பெய்லி பதில்!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா என்பது குறித்து அந்த அணியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி பேசியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவ... மேலும் பார்க்க

சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடும் விராட்கோலி! ஸ்மித்துடன் ஒரே களத்தில்..!

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற லீக் தொடரான பிக்-பாஸ் லீக்கின் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடுவது குறித்த தகவல்களை அந்த அணி உறுதிபடுத்தியிருக்கிறது.இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐபிஎல்... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+, ஷ்ரேயாஸ் உள்ளே, இஷான் வெளியே?

டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-25ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!

2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தத்தினை சாம் கான்ஸ்டாஸ், மேத்திவ் குன்னஹ்மேன், பியூ வெப்ஸ்டராகிய 3 இளம் வீரர்கள் ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகல்! டி20 கேப்டனாகும் ஷாய் ஹோப்!

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் தனது தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும், டி20 அண... மேலும் பார்க்க