செய்திகள் :

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

post image

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர் பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ் 3டி ஆடியோவை வழங்கும் வகையில், 360 டிகிரி கோணத்திலும் ஒலியலைகளை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில், தற்போது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • நீலம் மற்றும் சாம்பல் என இருவேறு வண்ணங்களில் உருவாகின்றன.

  • வயர் இல்லாத இயர்பட்ஸில் இதுவரை இல்லாத வகையில், அதிக பேட்டரி திறன் கொண்டது. 1000 முறை வரை சார்ஜிங்கில் எந்தவித மாற்றங்களுமின்றி பேட்டரி திறன் நீடிக்கும்.

  • தூசி படியாத வகையில் IP55 திறன் கொண்டது.

  • டைட்டானிக் முலாம் பூசப்பட்ட 12.4 மி.மீ விட்டமுடையது.

  • சினிமா தியேட்டரின் அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 3டி ஆடியோ மற்றும் 360 கோணத்தில் ஒலி அலைகளை ஏற்படுத்தும்.

  • புற ஒலிகளை நீக்கி, தெளிவான ஒலி அலைகளை பயனர்களுக்குக் கொடுக்கும்.

  • இதன் விலை ரூ. 1799. ஆனால், சில வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1,599 வரை சலுகை உள்ளது.

இதையும் படிக்க | இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

OnePlus Nord Buds 3r Launched in India: Price and Specs

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

புதுதில்லி: மொத்த விற்பனையாளர்கள், சிறு மற்றும் பெரிய சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பு விதிமுறைகளை மத்திய அரசு இன்று முதல் மேலும் கடுமையாக்கியுள்ளத... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

புது தில்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் அதிக வரி குறித்து 'எஃப்ஐஇஓ' (FIEO) கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. மோசமடைந்து வரும் செலவு, போட்டித்தன்மையின் காரணமாக திருப்பூர், நொய்டா மற்றும் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 12 காசுகள் சரிந்து 87.68 ஆக நிறைவடைந்தது.இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரியை அமல்படுத்தும் திட்டங்கள் குறித்த வரைவு அறிவிப்பை ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரியை அமல்படுத்துவது குறித்து அமெரிக்கா வரைவு அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து உள்ளநாட்டு பங்குச் சந்தையில், பரவலான விற்பனை அழுத்தம் காரணமாக இன்றைய... மேலும் பார்க்க

விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹானர் ஸ்மார்ட்போன்!

புதுதில்லி: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானரின் பிராண்ட் பார்ட்னரான பி.எஸ்.ஏ.வி. குளோபல் (PSAV Global), அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பதற்காக மின்னணு ஒப்பந்த உற்பத்திய... மேலும் பார்க்க

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

புதுதில்லி: ஃபின்டெக் நிறுவனமான ஃபோன்பே, தீ, வெள்ளம், பூகம்பங்கள், கலவரங்கள் மற்றும் திருட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அபாயங்களுக்கு நிகரான காப்பீடு வழங்கும் புதிய வீட்டுக் காப்பீட்டு திட்டத்தை அறிம... மேலும் பார்க்க