செய்திகள் :

'3 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த 11 வயது ஆப்பிரிக்க சிறுமி மீட்பு' - உடன்வந்த 45 பேரின் நிலை என்ன?

post image

மத்திய தரைக்கடல் பகுதியில் 11 வயது சிறுமி, 3 நாள்கள் தன்னந்தனியாக கடலில் தத்தளித்து பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனிலிருந்து புலம்பெயர்ந்து வந்த படகில் 45 பேருடன் வந்திருக்கிறார் அந்த சிறுமி. அவர்கள் வந்த படகு லம்பேடுசா (இத்தாலியில் உள்ள தீவு) கடற்கரையில் கவிழ்ந்தது, இவர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார் எனக் கூறுகின்றனர் Compass Collective rescue team என்ற மீட்பு குழிவினர்.

அரிதாக கேட்ட சத்தம்

Trotamar III என்ற படகில் மீட்பு படையினர் சென்றுள்ளனர் காம்பஸ் கலெக்டிவ் குழுவினர். இருளில் கடல் மொத்தமும் கறுப்பாயிருக்க, படகின் எஞ்சின் சத்தத்தைக் கடந்து சிறுமியின் பலவீனமான குரல் கேட்டதால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர் மீட்பு குழுவினர். அப்படி சத்தம் கேட்பது மிகவும் அரிதானது என்றும் கூறியுள்ளனர்.

அவரது குரலைக் கேட்டதும் திட்டமிட்டு அவரை மீட்டுள்ளனர். உடனடியாக ரோமில் உள்ள மீட்பு குழுவினருக்கு தொடர்புகொண்டு அவரை மருத்துவ உதவிக்காக ரோம் அனுப்பியுள்ளனர்.

சிறுமியின் நிலை என்ன?

மத்திய தரைக்கடல்

கடலில் புயல் வீசியதால் படகு கவிழ்ந்திருக்கிறது. 11 வயது பெண் சிறிய மிதவையில் இரண்டு டியூப்களைப் பிடித்தபடி மிதந்துள்ளார். அங்கு உணவோ தண்ணீரோ இல்லை, அத்துடன் அந்த பெண் hypothermia-வால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் நினைவை இழக்க வில்லை.

கடுமையான வானிலை காரணமாக மீட்பு படையினர் அந்த பெண்ணை கண்டடைய 3 நாட்கள் ஆகியிருக்கிறது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மேலும் 2 பேரைப் பார்த்ததாகவும் அதற்குப் பிறகு அவர்களைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

மத்திய தரைக்கடல்: 2014 -ல்லிருந்து 24,300 பேர் இறப்பு

மத்திய தரைக்கடல் துனிசியா, லிபியா, இத்தாலி மற்றும் மால்டா நாடுகளை இணைக்கக்கூடியது. புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு மிகவும் ஆபத்தான தடமாகும்.

2014-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் 24,300 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயிருக்கின்றனர். இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே. சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு 30,900 பேர் மத்திய தரைக்கடல் பகுதியில் இறந்திருக்கலாம் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து; விதிமுறைகள் பின்பற்றப்பட்டததா?- வி.ஏ.ஓ புகாரில் போலீஸார் விசாரணை

11திண்டுக்கல் சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையில் நடந்த தீ விபத்து தொடர்பாக சீலப்பாடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அளித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான சோகம்- நடந்தது என்ன?

திண்டுக்கல் - திருச்சி மேம்பாலம் அருகே என்ஜிஓ காலனி பகுதியில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது. நகரின் முக்கிய பகுதியில் 4 மாடி கட்டடங்களை கொண்ட இந்த மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்த டிரைவர்; மும்பை பஸ் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு!

மும்பையில் நேற்று முன் தினம் இரவு குர்லா பகுதியில் மாநகராட்சி பேருந்து சாலையோரம் இருந்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் க... மேலும் பார்க்க

கனமழை ஈரப்பதம்: வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி! - அறந்தாங்கியில் சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயல் மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி அம்மு, மகன் ஆதிஸ்வரன், மகள் இனியவள் ... மேலும் பார்க்க

மும்பை பஸ் விபத்து: உயிரை பணயம் வைத்து மகளை காப்பாற்றிய தாய்; நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

மும்பையில் நேற்று முன் தினம் இரவு நடந்த பஸ் விபத்து மும்பையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 42 பேர் காயம் அடைந்தனர். விபத்தின் போது கண்மூடித்தனமாக ... மேலும் பார்க்க

Nilgiris: `நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த 9 யானைகள்' - கூரையை பிரித்து உயிர் தப்பிய குடும்பம்..!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பெருந்தோட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது. வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்... மேலும் பார்க்க