செய்திகள் :

3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பிய அல்லு அர்ஜுன்!

post image

நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் நடத்திய மூன்று மணிநேர விசாரணை நிறைவடைந்தது.

புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறை அனுப்பிய சம்மனை ஏற்று, அல்லு அர்ஜுன் தனது வழக்கறிஞருடன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் ஹைதராபாத் மத்திய மண்டல காவல் ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ் 3 மணிநேரமாக விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தனது தந்தை அல்லு அரவிந்துடன் பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவடைந்து காவல் நிலையத்தில் இருந்து அல்லு அர்ஜுன் வீடு திரும்பியுள்ளார்.

இதையும் படிக்க : கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!

புஷ்பா 2 சிறப்பு திரையிடலுக்கு முன்அனுமதி பெறாமல் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் திரையிட்ட நிலையில், காவல்துறையிடம் தகவல் தெரிவிக்காமல் நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வருகைதந்தார்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் பலியான விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அல்லு அர்ஜுனின் பெயர் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அல்லு அர்ஜுனை காவல் துறையினர் கைது செய்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்றைய தினமே உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், முறையான ஆவணங்கள் இல்லை என்ற காரணம் காட்டி, அல்லு அர்ஜுனை ஒரு நாள் இரவு முழுவதும் சிறையிலேயே காவல்துறையினர் வைத்திருந்தனர்.

அடுத்த நாள் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளார்.

2024: வயநாடு நிலச்சரிவு பேரிடரல்ல, எச்சரிக்கை மணி!

2024 ஆம் ஆண்டை கேரள மக்கள் மட்டுமல்லாமல் உலகமே மறக்க முடியாத ஆண்டாக்கிய சில சம்பவங்களின் வரிசையில் வயநாடு நிலச்சரிவும் இடம் பெறுகிறது.மனிதர்களின் அசுர ஓட்டத்துக்கு இயற்கைக் கொடுத்த வேகத் தடையாக (பேரிட... மேலும் பார்க்க

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி விபத்து

ராம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் புரான்பூர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை பஞ்சாப் மாநிலத்துக்கு எடுத்துச் ... மேலும் பார்க்க

குட்டு வைத்த டிராய்: வெறும் அழைப்புகள், எஸ்எம்எஸ்-க்கு ரீசார்ஜ் திட்டங்கள்

இணையவசதி அல்லாமல், வெறும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவையை மட்டும் பெறும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று டிராய் பரிந்துரை செய்திருக்கிறது.தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை!

நூல் அஞ்சல் சேவையை டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்திய அஞ்சல் துறை நிறுத்தியுள்ளது.எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அஞ்சல் துறை எடுத்துள்ள இந்த முடிவு புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களை அதிர்ச்ச... மேலும் பார்க்க

நடுவானில் முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

பெங்களூருவில் இருந்து தில்லி சென்ற விமானத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட முன்னாள் ராணுவ வீரரை, அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் காப்பாற்றியுள்ளார்.இந்த சம்பவம் பெங்களூருவில் இருந்து தில்லி நோக்கி ஞாயி... மேலும் பார்க்க

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

முன்னாள் பிரதமா் 'பாரத ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 10... மேலும் பார்க்க