செய்திகள் :

``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது என்ன?

post image

கேரள மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சினிமாவில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காக காண்கிளேவ் திருவனந்தபுரம் சட்டசபை கட்டடத்தில் இம்மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடந்தன. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செறியான், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செறியான்

இரண்டு நாள்கள் நடந்த அந்த காண்கிளேவின் நிறைவுநாளில் பழம்பெரும் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையாயின. பட்டியலினத்தவர்களுக்கும், பெண்களுக்கும் சினிமா தயாரிக்க வழங்கப்படும் ஒன்ரை கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதற்கு முன் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியது விவாதத்தை கிளப்பியிருந்தது.

இந்த நிலையில் காண்கிளேவில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கேரள மாநிலத்தில் இன்னும் மூன்று மாதத்திற்குள் புதிய சினிமா கொள்கை ஏற்படுத்தப்படும் என மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செறியான் கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் சஜி செறியான் கூறுகையில், "சினிமாவில் ஆண்களின் கை மட்டும் ஓங்கியிருந்தால் போதாது. பெண்கள் சினிமா துறையில் முக்கிய பொறுப்புகளில் வரவேண்டும். மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பில் பதவிக்குவர பெண்கள் முதன்முறையாக போட்டியிடுகிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. அம்மா அமைப்பில் உள்ள பிரச்னைகளை அவர்கள் விவாதித்து முடிவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹேமா கமிட்டி அறிக்கை

சினிமாவில் பரஸ்பரம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அரசின் அறிவுரையாக உள்ளது. அதற்காகத்தான் சினிமா காண்கிளேவ் நடத்தப்பட்டது. வெவ்வேறு விதமாக சிந்திக்கும் அனைவரையும் ஒன்றிணைப்பதற்காகதான் காண்கிளேவ் நடத்தப்பட்டது. அதன் பலனாக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாநில சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்போது மாற்றத்துக்கான பணிகள் முழுமையடையும். கேரளா மாநிலத்தின் புதிய சினிமா கொள்கை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும்" என்றார்.

``அதுவும் ஒரு அனுபவம்'' - லலித் மோடியுடன் காதல் உறவு குறித்து மனம் திறந்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் எத்தனையோ பேருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஒரு சில உறவுகளை மட்டும் சுஷ்மிதா சென் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுண்டு. அந்த வகையில், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் சுஷ்மி... மேலும் பார்க்க

Pooja Hegde: "கிள்ளிப் பார்த்துக்கட்டுமா?" - பூஜா ஹெக்டேவுடன் அரட்டை அடித்த கமலேஷ்

சிம்ரனுடன் 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடி அவருக்கே டஃப் கொடுத்த கமலேஷ் தற்போது பூஜா ஹெக்டேவுடன் அரட்டை, டான்ஸ் எனக் கலக்கியிருக்கிறார்.கமலேஷிடம் பேசினோம்.'''பீஸ்ட்' படம் பார்த்ததுல ... மேலும் பார்க்க

`விஜய்'ணா இல்லாமல் LCU இல்லை!’ - லோகேஷ் கனகராஜ் கொடுத்த LCU அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கூலி. அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.லோ... மேலும் பார்க்க

அன்புமணிக்கு மாம்பழம்,1250 அழைப்பிதழ், சொந்த ஊருக்குத் தனி பஸ்; மகள் திருமணத்தை விவரிக்கும் கிங்காங்

கடந்த வாரம் சமூக வலைத்தளங்களை ரொம்பவே ஆக்கிரமித்திருந்த ஒரு செய்தி நடிகர் கிங்காங் மகள் திருமணம். நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்து கொண்ட அந்தத் திருமணத்தின... மேலும் பார்க்க

``ஸ்டண்ட் மாஸ்டர் நம்மோடு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை” - கலங்கிய பா.ரஞ்சித், சோகத்தில் படக்குழு..

இயக்குநர் பா.ரஞ்சித் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிப்பில் `வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. பிரபல ரெளடி ‘மண... மேலும் பார்க்க