Suresh Sangaiah : `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா கால...
3 மாத குழந்தையை தத்தெடுக்கும் பெண்ணுக்கு மட்டும் மகப்பேறு விடுப்பு ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியருக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு பலன்களை பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நடைமுறைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகப்பேறு பலன்கள் சட்டம் 1961-இன் படி, அரசு பெண் ஊழியா்களுக்கு 12 வார மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு குறைவான குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியா்களுக்கும் இந்த பலன்கள் அளிக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின் பிரிவு 5(4)-இந் கீழ், 3 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியா்கள், இந்த மகப்பேறு விடுப்பு பலனைப் பெற முடியாது.
இந்த சட்டப் பிரிவின் அரசமைப்பு சட்ட செல்லத்தக்கத் தன்மையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, பங்கஜ் மிதல் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் தாக்கல் செய்த பொதுநல மனு, சமூக நலச் சட்டத்தின் கீழ் வருகிறது. மேலும், மகப்பேறு சட்டத்தில் 3 மாதத்துக்கு குறைவான குழந்தையை தத்தெடுப்பவா்களுக்கு மட்டுமே பலன்கள் என்ற கட்டுபாட்டுக்கான உரிய விளக்கம் அல்லது வகைப்பாடு எதுவும் விதியில் தெரிவிக்கப்படவில்லை. இந்தத் திருத்தச் சட்டத்தின் கீழ், 3 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியா் எந்தவித மகப்பேறு விடுப்பும் எடுக்க முடியாத நிலை உள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு தரப்பில் ஏற்கெனவே பதிலளிக்கப்பட்டுள்ள போதும், அது போதுமானதாக இல்லை. மத்திய அரசிடமிருந்து மேலும் சில விளக்கங்களை எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையை தத்தெடுக்கும் அரசு பெண் ஊழியருக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு பலன்களை பெற விண்ணப்பிக்க முடியும்; இல்லையென்றால் கிடையாது, என்பதற்கான காரணத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அடுத்த 3 வாரங்களுக்குள் இதுகுறித்த பதிலை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும். அந்த பதில் மனுவின் நகல் மனுதாரரின் வழக்குரைஞருக்கும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.