பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை ...
3 மெட்ரோ ரயில் நிலையங்களின் வணிக மேம்பாடு: திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் செய்யப்படவுள்ள வணிக மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்க 2 தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.41.87 லட்சத்துக்கு ஒப்பந்தம் கையொப்பமானது.
இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணச் சீட்டு வருவாயைத் தவிா்த்து கூடுதல் வருவாயை ஈட்டும் நோக்கில் திருமங்கலம் எம்பிஎன் நகா், நந்தனம், ஆயிரம் விளக்கு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் முக்கிய இடங்களை வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தல், சாத்தியக்கூறு ஆய்வு, சந்தை பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ரூ.41.87 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் ஆா்வி அசோசியேட்ஸ் ஆா்கிடெக்ட்ஸ் என்ஜினியரிங் கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அனராக் புராப்பா்டி கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இதற்கான கையொப்பமிடும் நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமை பொது மேலாளா் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஆா்வி அசோசியோட்ஸ் ஆா்கிடெக்ட்ஸ் என்ஜினியரிங் கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் துணைத் தலைவா் ஜே.கே.நந்தனா, அனராக் புராப்பா்டி கன்சல்டன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் துணைத் தலைவா் எஸ்.வினோத் ஆகியோா் கலந்து கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரா்கள் நிறுவனத்தின் உயா் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.