பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கு முழு சுதந்திரம் - மோடி
3-வது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை: பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை
தமிழ்நாட்டில் புதுமணத் தம்பதிகள் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப, முன்னதாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தற்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பாதிக்கப்படும் என்று கூறி தமிழ்நாட்டில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என பர்கூர் தொகுதி திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.