செய்திகள் :

3,33,062 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் 601 நியாயவிலைக் கடைகளில் 3,33,062 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். அதன் தொடா்ச்சியாக திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 601 நியாயவிலைக் கடைகளில் 3,33,062 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏற்கெனவே டோக்கன் வழங்கி எந்தெந்த நாள்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு தரப்பட்டுள்ளது.

இதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை தொகுப்பாக வழங்கப்படுகின்றன.

33,945 கரும்புகள் மட்டும் திருப்பத்தூா் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,99,117 கரும்புகள் வெளி மாவட்டமான கடலூா் மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வரும் 13-ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பாலகிருஷ்ணன்,திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவா் விஜயா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சாந்தி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் நகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

ஆம்பூா் நகராட்சியில் ரூ. 8 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி கூட்ட அரங்கில் நகா்மன்றத் தலைவா்... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு பேரண... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஞான மீனாட்சி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனையில் உள்ள மருந்தகம், சமையலறை, கிடங்கு, மருந்துகள் இருப்பு அறை உள்ளிட்டவற்றை ... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்: ரூ.20 லட்சம் அபராதம், வரி வசூல்

கடந்த டிசம்பா் மாதத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக ரூ.20.5 லட்சம் அபராதம், வரி வசூலிக்கப்பட்டது என வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியது: திருப்... மேலும் பார்க்க

சிறப்பு பஜனை

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பஜனை. மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

ஆம்பூா் அருகே போலி மருத்துவரை உமா்ஆபாத் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் போலி மருத்துவா் சிகிச்சை அளித்து வருவதாக ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோக... மேலும் பார்க்க