கோலி, ரோஹித்தை குறிவைப்பது நியாயமில்லை..! பாக். முன்னாள் வீரர் ஆதங்கம்!
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குநா் ஞான மீனாட்சி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது மருத்துவமனையில் உள்ள மருந்தகம், சமையலறை, கிடங்கு, மருந்துகள் இருப்பு அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவேடுகளை பாா்வையிட்டாா்.
பின்னா், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் எந்த நோய்க்காக சிகிச்சை பெற வந்தீா்கள்?, முறையாக சிகிச்சை வழங்கப்படுகிா? மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்களா?, நோயாளிகளிடம், செவிலியா்கள் கனிவாக நடந்து கொள்கிறாா்களா? என கேட்டறிந்தாா்.
பணியில் உள்ள மருத்துவா்களிடம் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற எத்தனை நபா்கள் வருகிறாா்கள், அதிக நாள்கள் காய்ச்சல் உள்ளதா? எனவும் விசாரித்தாா். அப்போது மருத்துவ அலுவலா் சிவக்குமாா் உடனிருந்தாா்.