புதுக்கோட்டை: ``எங்களுக்கு பெரியார் மண் இல்லை... பெரியாரே மண்தான்!'' -சீமான் காட...
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற தில்லி அரசு உறுதி: அதிஷி
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி முதல்வர் அதிஷி மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தலைநகரில் உள்ள சத்ரசல் அரங்கத்தில் நடைபெற்ற குடியரசுத் தின நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி பேசினார். நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்கள் நினைவுகூர வேண்டும்.
பகத்சிங், மகாத்மா காந்தி, லாலா லஜபதிராய், சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களைப் பற்றி அல்ல, நாட்டைப் பற்றியே நினைத்தார்கள். அவர்களின் தியாகம் தன்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
இந்தியாவின் மாற்றுப் பயணத்தையும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதில் பி.ஆர். அம்பேத்கரின் தலைமையில் வரைவு செய்யப்பட்ட அரசியலமைப்பின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பாபா சாகேப் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. நமது அரசியலமைப்புச் சட்டம் சம வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது, இதை நனவாக்க தில்லி அரசு அயராது உழைத்து வருகிறது என்று அவர் கூறினார்.
தில்லி அரசு முக்கிய துறைகளில், குறிப்பாகக் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மேற்கொண்ட முன்னேற்றங்களை அதிஷி குறிப்பிட்டார். தில்லியில் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையிலிருந்த காலம் இருந்தது. பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கவில்லை, இது வறுமையை நிலைநிறுத்தியது.