செய்திகள் :

ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! தேடுதல் வேட்டை தீவிரம்!

post image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் இந்திய ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.

கத்துவா மாவட்டத்தின் பத்தோடி கிராமத்திலுள்ள ராணுவ முகாமின் மீது நேற்று (ஜன.24) இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று (ஜன.24) மாலை பத்தோடி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற தில்லி அரசு உறுதி: அதிஷி

இதனைத் தொடர்ந்து, ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க கத்துவா மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.

இந்தியாவின் குடியரசு நாளின் நிகழ்ச்சிகள் நாளை (ஜன.26) கொண்டாடப்படும் நிலையில் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதினால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர் கே.எம்.செரியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மருத்துவர் செர... மேலும் பார்க்க

தெலங்கானா: லாரியில் இருந்த கம்பிகள் கார், ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் 4 பேர் பலி

தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டத்தில் லாரியில் இருந்த கம்பிகள் கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் கார், ஆட்டோவில் இருந்தவர்களில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாக தகவல்... மேலும் பார்க்க

குறுகிய காலத்தில் நிறைவடையும் பிரபல தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திரவியம் ... மேலும் பார்க்க

பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்தி!

குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரச... மேலும் பார்க்க

அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்: விஜய்

குடியரசு நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தமிழகத... மேலும் பார்க்க

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய சிலுவைபுரம் கிராம மக்கள்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு நாளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வீட... மேலும் பார்க்க