புதுக்கோட்டை: ``எங்களுக்கு பெரியார் மண் இல்லை... பெரியாரே மண்தான்!'' -சீமான் காட...
தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம் தமிழினம்: விஜய்
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம் தமிழினம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் நாள்(ஜன. 25) அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம்.
மொழிப்போர் தியாகிகள் நாள்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு!
தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்.
உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்கி, நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க! என விஜய் கூறியுள்ளார்.