செய்திகள் :

கொல்கத்தா பனிப்புகையை குற்றம்சாட்டிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்!

post image

கொல்கத்தாவின் பனிப்புகையினால் சரியாக விளையாட முடியவில்லையென இங்கிலாந்து துணை கேப்டன் ஹாரி புரூக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜன.22இல் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

2ஆவது டி20 சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு (ஜன.25) நடைபெறவிருக்கிறது

இந்த நிலையில் ஹாரி புரூக் கொல்கத்தாவின் கால்நிலையினால் சுழல்பந்துகளை ஆட முடியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹாரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஹாரி புரூக் கூறியதாவது:

பனிப்புகைதான் காரணம்

நான் பிஷ்னோயை விளையாடவில்லை. ஆனால், வருண் சக்கரவர்த்தி தலைசிறந்த பந்துவீச்சாளர். அவரது பந்தினை கணிக்க முடியவில்லை. அநேகமாக அன்றைய இரவு பனிப்புகையினால் பந்தினை சரியாக பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். சென்னையில் பந்து நன்றாக தெரியும். அதனால் இங்கு பந்தினை பார்ப்பது சற்று எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.

வருண் சக்கரவர்த்தி அற்புதமான வீரர். பல திறமைகளுடன் துல்லியமாக பந்து வீசுகிறார். இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்கள் மீது சென்னையில் அழுத்தத்தை அளிப்போம் என நம்புகிறேன் என்றார்.

இதேபோல் இதற்கு முன்பும்...

இதேபோல் இதற்கு முன்பு 1992-93இல் டெட் டெக்ஸ்டர் முதல் டெஸ்ட் தோல்விக்கு பனிப்புகையை காரணம் கூறியிருந்தார். 2017ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை போட்டியில் சில வீரர்கள் வாந்தி எடுத்ததால் போட்டி கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சார்பில... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ... மேலும் பார்க்க

மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்திய மகளிரணி முன்னேறியுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ... மேலும் பார்க்க

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவத... மேலும் பார்க்க

இங்கிலாந்து போராட்டம் வீண்! திலக் வர்மா அதிரடியால் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 2... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: முதல் நாளில் 20 விக்கெட்டுகள்; மே.இ.தீவுகள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன... மேலும் பார்க்க