டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
தனித்து இறங்கும் தாக்கரே; `விபரீத முடிவு’ - சரத் பவார்... பரபரக்கும் மும்பை மாநகராட்சி தேர்தல்!
மகாராஷ்டிராவில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஓரிரு மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இதனால் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா நிர்வாகிகள் கூறி வந்தனர்.
அதனை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தது. இதனால் மகாவிகாஷ் அகாடி உடைந்துவிட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரேயும், அவரின் கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத்தும் மும்பையில் சரத்பவாரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும், எதிர்க்கட்சி தலைவர் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். தற்போது மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறக்கூடிய அளவுக்கு எந்த கட்சியும் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
எனவே மகாவிகாஷ் அகாடியில் உள்ள மூன்று கட்சிகளும் சேர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை கேட்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், ''மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தனித்து போட்டியிடமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரேயுடன் பேசினேன். மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக குறிப்பிட்டார். நேற்றுக்கூட அது பற்றி பேசினார். நிச்சயம் அது அவரது கருத்துதான். ஆனால் அந்த மாதிரியான விபரீத முடிவை எடுக்கமாட்டார் என்று நம்புகிறேன். விரைவில் மகாவிகாஷ் அகாடி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்துவேன்''என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் இக்கட்சிகள் தனித்தே போட்டியிட்டன. பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் வரும் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்காக மும்பை, புனே, தானே போன்ற பகுதியில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஏக்நாத் ஷிண்டே ஈடுபட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs