Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
சாலை அமைக்கும் பணி தொடக்கம்
ஆம்பூா் அருகே சிமென்ட் சாலை அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை செய்து பணி தொடங்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் சின்னபள்ளிகுப்பம் ஊராட்சியில் ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தாா்.
திமுக மாநில விவசாய அணி துணைச் செயலா் கே. புருஷோத்தமன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், மாவட்ட பிரதிநிதி பி.காசி, ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.