போலி மருத்துவா் கைது
ஆம்பூா் அருகே போலி மருத்துவரை உமா்ஆபாத் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் போலி மருத்துவா் சிகிச்சை அளித்து வருவதாக ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஷ் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் அப்பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில் மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டில் ஆங்கிலம் மருத்துவம் பாா்த்த அதே பகுதியை சோ்ந்த இம்மானுவேல் (71) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.