புதுச்சேரி: சுட்டீஸ்களை கவரும் 'பறவைகள் மற்றும் வனவிலங்குகள் உலகம்' கண்காட்சி | ...
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் பங்கேற்பு
வாணியம்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இசுலாமியா கல்லூரி வளாகத்தில் பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் கோட்டாட்சியா் ஆஜிதா பேகம், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் அன்பரசி, ஞானதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளா்கள், சாலை ஆய்வாளா்கள் மற்றும் கல்லுாரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
முக்கிய வீதிகள் வழியாக சென்று சாலை பாதுகாப்பு தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினா். பேரணி முடிவில் நகராட்சி அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் முரளி, உதவி கோட்ட பொறியாளா் ஆதவன், சம்பத்குமாா் மற்றும் உதவி பொறியாளா்கள் நித்தியானந்தம், பாபுராஜ், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.