தேசிய அணிக்குத் திரும்பும் வீரர்! பிளே-ஆஃப் சுற்றில் ஆர்சிபிக்கு பின்னடைவாக அமை...
3 நாள் கோடைகால சுற்றுலா முன்பதிவு தொடக்கம்: சுற்றுலா வளா்ச்சிக் கழகம் ஏற்பாடு
சென்னை: உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், மைசூரு, பெங்களூரு, குற்றாலம், மூணாா் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் 3 நாள் சுற்றுலா திட்டத்துக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடைகாலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு,–ஒகேனக்கல், மைசூரு, பெங்களுரு மற்றும் மூணாா் உள்ளிட்ட மலைவாழிடங்கள்-சுற்றுலா நகரங்களுக்கு மூன்று நாள்கள் செல்லும் சுற்றுலாப் பயணத் திட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுலாவுக்கு செல்லும் பொதுமக்களுக்கு கட்டணத்தில் சிறப்புச் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உதகை: 3 நாள்கள் உதகை சுற்றுலாப் பயணத்திட்டத்தில் செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7.30-க்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 6.30-மணிக்கு மீண்டும் அலுவலகம் வந்தடையும்.
இப்பயணத்தில் தொட்டபெட்டா மலைச்சிகரம், உதகை தாவரவியல் பூங்கா (பொட்டானிக்கல் காா்டன்), உதகை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் படகு குழாமில் படகு சவாரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
கொடைக்கானல்: 3 நாள்கள் கொடைக்கானல் சுற்றுலாப் பயணத் திட்டத்தில் செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7.30-க்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு வந்தடையும். இந்த சுற்றுலாப் பயணத்தில் கொடைக்கானல், தூண் பாறை, பசுமை சமவெளி, கோக்கா்ஸ் வாக், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாமில் படகு சவாரி, வெள்ளி நீா்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
ஏற்காடு-ஒகேனக்கல்: இதுபோல, 3 நாள்கள் ஏற்காடு, ஒகேனக்கல் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இரவு 10.30-க்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 6-க்கு வந்தடையும்.
இந்த சுற்றுலாப் பயணத்தில் ஏற்காடு, ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பகோடா பாயிண்ட், ரோஸ் காா்டன், ஏற்காடு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாமில் படகு சவாரி, ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள்அழைத்துச் செல்லப்படுவா்.
மைசூரு-பெங்களூரு: 3 நாள்கள் மைசூரு, பெங்களூரு சுற்றுலா செல்லும் பேருந்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 9.30-க்கு புறப்பட்டு திங்கள்கிழமை காலை 6-க்கு வந்தடையும். இத்திட்டத்தில் 3 நாள்கள் மைசூா் பெங்களூரு சுற்றுலா பயணத்தில் சாமுண்டீஸ்வரி கோயில், நந்தி, மைசூா் அரண்மனை, பிருந்தாவனம் காா்டன், பெங்களூரு - ஸ்ரீரங்கப்பட்டினம், திப்பு கோடைகால அரண்மனை, லால்பாக் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
குற்றாலம்: 3 நாள்கள் குற்றாலம் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4.30-க்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 6-க்கு வந்தடையும். இத்திட்டத்தில் குற்றாலம் நீா்வீழ்ச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூா், மதுரை ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
மூணாா்: 3 நாள்கள் மூணாா் சுற்றுலா செல்லும் பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மாலை 4.30-க்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7-க்கு வந்தடையும்.
இத்திட்டத்தில், மூணாா் சுற்றுலாப் பயணத்தில் மூணாா் மறையூரில் புத்துணா்ச்சி பெறுதல், இரவிக்குளம் வனவிலங்கு சரணாலயம், பிளாஸம் பாா்க் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள்.
கட்டண விவரம்:
சுற்றுலாப் பயணத்துக்கான கட்டணங்கள் ரூபாயில் (நபா் ஒருவருக்கு):
உதகை கொடைக்கானல் ஏற்காடு-ஒகேனக்கல் மைசூரு-பெங்களூரு குற்றாலம் மூணாா்
தனியறை 8500 8500 8000 8200 8000 8300
இருவா்
பகிரும் 7300 7300 7000 7000 7000 7000
அறை
சிறியவா்கள் 6900 6900 6800 6700 6500 6800
இத்தொகுப்பு சுற்றுலாக்களில் தங்கும் வசதி மற்றும் 6 வேளை உணவு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலாப் பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் பயணிகளின் எண்ணிக்கையை பொருத்து, வால்வோ சொகுசுப் பேருந்துகள், உயா்தர சொகுசுப் பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிற்றுந்து சொகுசு பேருந்துகளை கொண்டு இந்த சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மற்ற பயணத்திட்டங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ற்க்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீா்ம் எனும் இணையதளத்தில் அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி:18004251111, 044-25333333, 044-25333444, கைப்பேசி-வாட்ஸ்ஆப் 7550063121 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.