நேரடி வெய்யிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவா்கள் எச்சரிக்...
உதகை மலர்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு!
உதகையில் 127-ஆவது மலர்க் கண்காட்சி மே 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இதை அனுபவிப்பதற்காக உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலர்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, கோத்தகிரி நேரு பூங்காவில் 13-ஆவது காய்கறி கண்காட்சி மே 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி மே 10, 11, 12 ஆகிய தேதிகளிலும், கூடலூரில் 11-ஆவது வாசனை திரவியக் கண்காட்சி மே 9, 10, 11 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.
உதகை தாவரவியல் பூங்காவில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் நடைபெறும் முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக மே 15-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 65-ஆவது பழக் கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
நடப்பு ஆண்டு முதல்முறையாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30, 31 மற்றும் ஜூன் 1-ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!