திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைத்து தலைவர்களும் இந்திய முப்படைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை செயலரும் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்து ஆதாரங்களையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நாளை (மே 7) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.