அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசா...
மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!
சென்னையில் மகளிர் விடியல் மாநகரப் பேருந்தில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
திராவிட முன்னேற்றக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள சென்றார்.
அப்போது, சென்னை மாநகர அரசுப் பேருந்துகளில் ஏறி மக்களிடமும் ஓட்டுநர், நடந்துனரிடமும் முதல்வர் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தமிழக அரசு இயக்கும் மகளிர் இலவசப் பேருந்தான மகளிர் விடியல் பேருந்தில் ஏறி, மக்களோடு பயணம் செய்தார்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.