செய்திகள் :

6 இடங்களில் வெயில் சதம்

post image

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூா் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், பரமத்திவேலூா் - 100.76, வேலூா் - 100.58, திருப்பதூா் - 100.4, திருச்சி -100.22, சேலம் - 100.04 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னைக்கு மழை: தென்னிந்திய கடலோரப் பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, வியாழக்கிழமை (மே 8) முதல் மே 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை புகா் பகுதிகளில் புதன்கிழமை காலை வரை நெற்குன்றம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் 20 மி.மீ.யும், சாலிகிராமம், அண்ணாநகா் மேற்கு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ.யும், மழை பதிவானது. வியாழக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 110 மி.மீ. மழை பதிவானது. மேலும் திருத்தணி (திருவள்ளூா்) - 80 மி.மீ, திருபுவனம் (சிவகங்கை), பள்ளிப்பட்டு (திருவள்ளூா்), செம்மேடு (விழுப்புரம்), சின்னக்கல்லாா் (கோவை), சாத்தூா் (விருதுநகா்) - தலா 70 மி.மீ., செஞ்சி (விழுப்புரம்), கள்ளந்திரி (மதுரை), திருப்பத்தூா் (சிவகங்கை) - தலா 60 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க