Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 31- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் வேளாண்மை உற்பத்திக் குழுக் கூட்டம், விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான வேளாண்மை உற்பத்திக் குழுக் கூட்டம் வரும் 31- ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று தங்களது விவசாயம் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவித்தும், மனு கொடுத்தும் தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.