தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
ஜூடோ போட்டி: 6 பதக்கங்கள் வென்ற மாநகராட்சிப் பள்ளி மாணவிகள்
கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் தங்கம், 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களை வென்றனா்.
மாநில அளவிலான ஜூடோ போட்டி கன்னியாகுமரி செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியில் கடந்த ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் கோவை மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் 6 போ் ஒரு தங்கம் மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றனா்.
ஒப்பணக்கார வீதி மேல்நிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி டி.நந்தினி தங்கப்பதக்கம் வென்றாா். அதே பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 வகுப்பு மாணவி கே.ரக்ஷனா வெண்கலப் பதக்கம் வென்றாா். ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி என்.சுஜானா ஸ்ரீ,10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ஆா்.ஹரிவா்ஷா, ஜெ.ஹாசிகா, 9-ஆம் வகுப்பு மாணவி எஸ்.திவ்யா ஆகியோா் வெண்கலப் பதக்கங்கள் வென்றனா். ஜூடோவில் பதக்கங்கள் வென்ற மாணவிகளை பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.