ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!
38 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல்தர வீரர்!
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 38 வயதான முதல்தர கிரிக்கெட் வீரருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான 18 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி லாகூரில் துவங்குகிறது.
இதில், ஆச்சரியமளிக்கும் விதமாக 38 வயது வீரர் உள்பட மூவர் முதல்முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
லீக் போட்டிகள் மற்றும் முதல் தரப் போட்டிகளில் அனுபவமிக்க சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஆசிஃப் அஃப்ரிடி, இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஃபைசல் அக்ரம் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் ரோஹைல் நசீர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷான் மசூத் கேப்டனாக தொடர்கிறார். ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடிய கேப்டன் சல்மான் அலி அகா, ஹசன் அலி, அஃப்ரார் அகமது ஷாகீன் ஷா உள்ளிட்ட வீரர்கள் அக்டோபர் 4 ஆம் தேதி பயிற்சி முகாமில் இணைகின்றனர்.
ஆசிஃப் அஃப்ரிடி
38 வயதான ஆசிஃப் அஃப்ரிடி இதுவரை 57 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 25.49 சராசரியுடன் 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளில் அறிமுகமான 22 வயதான அக்ரம், இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அவர் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
23 வயதான நசீர் அவர் ஏற்கனவே 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 அணியில் அறிமுகமானார். 2018-19 சீசனில் அறிமுகமானதில் இருந்து 43 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பாகிஸ்தான் அணி விவரம்
ஷான் மசூத் (கேப்டன்)
அமீர் ஜமால்
அப்துல்லா ஷபீக்
அப்ரார் அகமது
ஆசிப் அப்ரிடி
பாபர் அசாம்,
ஃபைசல் அக்ரம்
ஹசன் அலி
இமாம்-உல்-ஹக்
கம்ரான் குலாம்
குர்ரம் ஷாஜாத்
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்)
நோமன் அலி
ரோஹைல் நசீர் (விக்கெட் கீப்பர்)
சஜித் கான்
சல்மான் அலி ஆகா
சவுத் ஷகீல்
ஷாஹீன் ஷா அப்ரிடி.