உள்ளாட்சித் தேர்தல்களில் 42% இட ஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்த...
``4-வது மனைவிக்கு மாதம் ரூ.30,000 கொடுக்க வேண்டும்'' - சமாஜ்வாடி எம்.பி.,க்கு கோர்ட் உத்தரவு
உத்தரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாடி கட்சி எம்.பியாக இருப்பவர் மொஹிப்புல்லாஹ் நட்வி. ராம்பூர் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நட்விக்கு 4 மனைவிகள் உண்டு.
நான்காவது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் நான்காவது மனைவி இவ்விவகாரத்தை கோர்ட்டிற்கு கொண்டு சென்றார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காவது மனைவி ஆக்ரா குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நட்வி தனது மனைவிக்கு பராமரிப்பு தொகை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து நட்வி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இம்மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது எம்.பி.சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இப்பிரச்னை கணவன் மனைவி சண்டை தொடர்பானது என்றும், நட்வி இவ்விவகாரத்தில் தனது மனைவியுடன் சுமூகமாக செல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
எம்.பி.தரப்பு வாதத்தில் திருப்தியடைந்த நீதிபதி, இவ்விவகாரத்தில் மூன்று மாதத்தில் சுமூக தீர்வுக்கு வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் ஒவ்வொரு மாதமும் 4-வது மனைவிக்கு எம்.பி.ரூ.30 ஆயிரம் பராமரிப்பு தொகை கொடுக்க வேண்டும் என்றும், அப்படி கொடுக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதோடு கோர்ட்டில் 55 ஆயிரம் டெபாசிட் கட்டும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.