செய்திகள் :

40 ஆண்டுகளுக்கு மேல் சிறை, உலகின் தனிமையான மனிதக்குரங்கு!

post image

தாய்லாந்து நாட்டிலுள்ள தனியார் வனவிலங்கு காட்சிசாலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு மனிதக்குரங்கு தனிமையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் பாங்காக்கிலுள்ள ஒரு வணிக வளாகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது தளங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தனியாருக்குச் சொந்தமான பட்டா எனும் வனவிலங்கு பூங்கா உள்ளது.

அங்குதான், உலகின் தனிமையான மனிதக்குரங்கு என்று வர்ணிக்கப்படும் அந்த விலங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு வினய் செர்ம்சிரிமொங்கோல் என்பவர் நிறுவிய இந்த காட்சிசாலையை தற்போது அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு வயது குட்டியாக ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புவா நொய் அல்லது லிட்டில் லோடஸ் என்றழைக்கப்படும் இந்த பெண் மனிதக்குரங்கு கடந்த 40 ஆண்டுகளாக அந்த வணிகவளாகத்தின் மேல்தளத்தில் அடைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதையும் படிக்க: தென் கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள் வெற்றி!

இது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவதால், அங்கிருக்கும் கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கின்றது.

இதனால், அதன் உரிமையாளர்கள் புவா நொய்க்கு பல ஆண்டுகளாக அந்த இரும்புக் கூண்டையே நிரந்தரமாக்கியுள்ளனர்.

இருப்பினும், அந்த மனிதக்குரங்கை விடுவிக்க பல்வேறு அமைப்புகளும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும் அதற்கு அதன் உரிமையாளர்கள் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தாய்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் கூறுகையில், புவா நொய்-ஐ மீட்டு விடுவிப்பதற்காக அதன் ஆதரவாளர்கள் பலர் நன்கொடை சேகரித்து அதன் உரிமையாளர்களிடம் முறையிட்டாலும் அவர்கள் அதை விற்க மறுப்பதாகவும், அப்படியே ஒப்புக்கொண்டாலும் மிக அதிகமான தொகையாக சுமார் ரூ.7.4 கோடி அதற்கு ஈடாக கேட்பதாகவும் அவர் கூறினார்.

தனிமையில் வாடும் இந்த மனிதக்குரங்கை மீட்டு அதனை விடுதலை செய்வதற்காக விலங்கு பாதுகாப்பு அமைப்பான பீட்டா கடந்த 12 வருடங்களாக போராடி வருகின்றது.

ஒரு மனிதக்குரங்கின் சராசரி ஆயுள் காலம் 35-40 ஆண்டுகள் என்பதினால் எங்கு தனது விடுதலைக்கு முன்னரே புவா நொய் மரணமடைந்து விடுமோ என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பட்டா வனவிலங்கு காட்சி சாலையில் புவானொய் போன்று 200க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் சுகாதாரமற்ற முறையில் அடைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஒசூரில் யானை தந்தம் விற்க முயன்ற 7 போ் கைது

ஒசூா்: ஒசூரில் யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்த வனத் துறையினா் தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.ஒசூா் வனப் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் யானைகளைக் கொன்று தந்தங்களை கடத்துவதாக வனத் ... மேலும் பார்க்க

சேலத்தில் ஜவுளி பூங்காவுக்கான பணிகள் விரைவில் துவக்கம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் அதி நவீன ஜவுளி பூங்காவுக்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கூறினாா்.சேலம் மாவட்டம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் 1... மேலும் பார்க்க

பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு: தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம்!

தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) - பேராசிரியர் தகுதித் தேர்வு (நெட்)நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர... மேலும் பார்க்க

தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்

தொடரும் கடற்கொள்ளையா்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் கொண்டு செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்: ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்துக்கே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார். சுத்தமல்லியை அ... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். ... மேலும் பார்க்க